பாஸ் கட்சி எச்சரிக்கை
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், நேற்று தனது தேசிய மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய வேளையில் அன்வார் அரசாங்கம் எந்த நேரத்திலும் மாறலாம் என்று பாஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு முன்பு அன்வார் முரசு கொட்டிய கொள்கையும், வாக்குறுதியும் அடைமானம் வைக்கப்பட்டு விட்டதாக பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் கைரில் நிஸாம் கிருடின் குற்றஞ்சாட்டினார்.
அன்வார் பேசுவதைப் போல நடந்து கொள்வது இல்லை. நாட்டின் தலைமகனைப் போல காட்சி தரும் அன்வார், தாம் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் 24 மணி நேரத்தில் எண்ணெய் விலை குறையும் என்று கடந்த ஆண்டு ஜுலை மாதம் 17 ஆம் தேதி நடைபெற்ற பிகெஆர் தேசிய மாநாட்டில் அன்வார் பகிரங்கமாக அறிவித்து இருந்ததை மக்கள் மறந்து விடவில்லை என்று தெரிவித்துள்ளார்.








