Dec 2, 2025
Thisaigal NewsYouTube
15 கோடி வெள்ளி இழப்பீடு கேட்டு துன் மகாதீர் கோரிக்கை
தற்போதைய செய்திகள்

15 கோடி வெள்ளி இழப்பீடு கேட்டு துன் மகாதீர் கோரிக்கை

Share:

தமக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டைக் கட்டவிழ்த்திருப்பதாக கூறி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் 15 கோடி வெள்ளி இழப்பீடு கோரி அவதூறு வழக்கை தொடுத்துள்ளார்.

தம்மிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று தாம் விடுத்திருந்த கோரிக்கையைப் பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் பொருட்படுத்தாததைத் தொடர்ந்து, துன் மகாதீர் இந்த அவதூறு வழக்கைச் சார்வுச் செய்துள்ளார்.

கடந்த மார்ச் 18 ஆம் தேதி, ஷா ஆலம், ஸ்டேடியம் மெலாவாத்தி ஸ்டேடியமில், உரையாற்றிய போது, தமது நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அன்வார் அவதூறான குற்றச்சாடை முன்வைத்திருப்பதாக துன் மகாதீர் தமது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளர்.

குறிப்பாக, நாட்டின் பிரதமராக சுமார் 22 ஆண்டுக் காலம் பொறுப்பேற்றிருந்த போது, தமக்கும், தமது குடும்பத்திற்கும் கோடிக்கணக்கான வெள்ளி சொத்துக்களைக் குவித்துக்கொண்டதாக அன்வார் குற்றஞ்சாட்டியிருப்பதாக துன் மகாதீர் தமது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related News