May 4, 2026
Thisaigal NewsYouTube
ரஃபிஸி ரம்லியின் முன்னாள் உதவியாளரைத் தேடுகிறது SPRM
தற்போதைய செய்திகள்

ரஃபிஸி ரம்லியின் முன்னாள் உதவியாளரைத் தேடுகிறது SPRM

Share:

முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லிக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக, அவரது முன்னாள் உதவியாளர் ச்சாய் ஜின் ஷெர்ன் எனும் ஜேம்ஸ் ச்சாய் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தேடி வருகின்றது.

பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஃபிஸி, பொருளாதார அமைச்சராகப் பதவி வகித்த போது ஜேம்ஸ் ச்சாய் அவருக்கு சிறப்பு அதிகாரியாக செயல்பட்டார்.

கடந்த ஆண்டு மே மாதம் ரஃபிஸி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, ஜேம்ஸ் ச்சாய் தனது பொறுப்பிலிருந்து விலகினார்.

இந்நிலையில், ஜேம்ஸ் ச்சாய் குறித்த தகவல் தெரியும் பொதுமக்கள் உடனடியாக விசாரணை அதிகாரி ஹபிஸ் அப்துல் ஹலிமைத் தொடர்பு கொள்ளுமாறு SPRM அறிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கும், வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கும் இடையிலான 1.1 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் குறித்த விசாரணையில், பொருளாதார அமைச்சின் பொதுச் செயலாளர் உட்பட பல சாட்சிகளை SPRM விசாரணை செய்யவுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

மானிய முறையை மாற்றியமைப்போம்": பொருளாதார வளர்ச்சிக்காக டோனி பெர்னாண்டஸ் விடுத்த அறைகூவல்

மானிய முறையை மாற்றியமைப்போம்": பொருளாதார வளர்ச்சிக்காக டோனி பெர்னாண்டஸ் விடுத்த அறைகூவல்

கெப்போங் தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி - அமைச்சர் கோபிந்த் சிங் அறிவிப்பு

கெப்போங் தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி - அமைச்சர் கோபிந்த் சிங் அறிவிப்பு

தொழிலாளர் போராட்ட நாயகன் டாக்டர் வி. டேவிட் பெயரில் புதிய விருது: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு அறிவிப்பு

தொழிலாளர் போராட்ட நாயகன் டாக்டர் வி. டேவிட் பெயரில் புதிய விருது: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு அறிவிப்பு

அவசரநிலை பிரகடனத்தை நீதிமன்றத்தில் எதிர்க்க முடியாது: அப்பீல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

அவசரநிலை பிரகடனத்தை நீதிமன்றத்தில் எதிர்க்க முடியாது: அப்பீல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

இன்ஸ்பெக்டர் ஷீலா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய சட்டத்துறை அலுவலகம் மறுப்பு

இன்ஸ்பெக்டர் ஷீலா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய சட்டத்துறை அலுவலகம் மறுப்பு

MRR2 சாலை விபத்து: பெண் பலி, வருங்கால கணவர் காயம்

MRR2 சாலை விபத்து: பெண் பலி, வருங்கால கணவர் காயம்