Oct 10, 2026
Thisaigal NewsYouTube

2025 ஆம் ஆண்டில் முதலாவது கோவிட் 19 மரணச் சம்பவம் பதிவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2025 ஆம் ஆண்டில் முதலாவது கோவிட் 19 மரணச் சம்பவம் பதிவு

கோலாலம்பூர், ஜூன்.19-

மலேசியா 2025 ஆம் ஆண்டின் முதலாவது கோவிட் 19 மரணச் சம்பவத்தைப் பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த ஜுன் 8 ஆம் தேதிக்கும் 15 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலக் கட்டத்தில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

கோவிட் 19 இல் இறந்த நபர், இருதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற கடும் நோய்களுக்கு ஆளாகியுள்ளார். அதே வேளையில் இறந்த நபர், கோவிட் 19 தொடர்பில் இரண்டாவது தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளவில்லை என்பது தெரிய வந்துள்ளது என்று சுகாதார அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →