Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பெற்றோரை வெட்டிக்கொன்றதாக ஆடவன் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பெற்றோரை வெட்டிக்கொன்றதாக ஆடவன் மீது குற்றச்சாட்டு

Share:

தன் தந்தையையும், தாயாரையும் கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொன்றதாக ஆடவர் ஒருவர், கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

42 வயது எஃபென்டி முஹமாட் ஆகுஸ் அலியாஸ் முஹமாட் அலி என்ற அந்த ஆடவர், மாஜிஸ்திரேட் வொங் சாய் சியா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட ஆடவர், கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி இரவு 7.10 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் பென்சாலா ஹிலீர், கம்போங் சுங்ஙாய் பென்சாலாவில் உள்ள வீட்டில் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற முன்னாள் ஊழியரான 82 வயதுடைய தனது தந்தை முஹமாட் ஆகுஸ், 72 வயதுடைய தனது தாயார் டர்லிஸ்மா நிஜத்து சாலேஹ் ஆகியோரை கொலை செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் எஃபென்டி முஹமாட் ஆகுஸ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News