நம்பிக்கை மோசடி உட்பட 4 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள மூடா கட்சியின் தலைவர் சையத் சாதிக் அப்துல் ரஹ்மானுக்கு எதிரான வழக்கில், தீர்ப்பின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கில் பிராசிகியூஷன் தரப்பு மற்றும் எதிர் தரப்பு, தத்தம் வாதத்தொகுப்புகளை முடித்துக்கொண்டதைத் தொடர்ந்து, தீர்ப்புத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிபதி அஸ்ஹார் அப்துல் ஹமிட் தெரிவித்துள்ளார்.
எனினும், தீர்ப்பை அறிவிக்க நீண்டகாலம் ஆகலாம் என்று எந்தவொரு தரப்பும் அச்சப்பட வேண்டியதில்லை. காரணம், வெகு விரைவில் தீர்ப்பிற்கான தேதி நிர்ணயிக்கப்படும் என்று நீதிபதி இன்று அறிவித்துள்ளார்.
தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட 10 லட்ச வெள்ளியை நம்பிக்கை மோசடி செய்வதில் உடந்தையாக இருந்ததாக மூவார் எம்.பி. யுமான சையத் சாதிக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு


