Jun 3, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் விபத்து வழக்கு: ஆய்வக உதவியாளர் போதைப்பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை
தற்போதைய செய்திகள்

கிள்ளான் விபத்து வழக்கு: ஆய்வக உதவியாளர் போதைப்பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை

Share:

கிள்ளானில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மரணமடைந்த விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்ட 28 வயது ஆய்வக ஆய்வக உதவியாளர் ஆர். சக்தி கணபதி, போதைப்பொருள் உட்கொண்டதாக தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

இன்று கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சக்தி கணபதி, தனது வாக்குமூலத்தை மாற்றி, விசாரணை கோரினார். கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி அவர் இக்குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட நிலையில், அப்போது தமக்கு வழக்கறிஞர் பிரதிநிதித்துவம் இல்லாததால் அதன் தாக்கங்களை புரிந்து கொள்ளவில்லை என சக்தி கணபதி, தனது வழக்கறிஞர் அர்விந்த் ராஜ் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கிடையில், போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டி உணவு விநியோகிப்பவரான 33 வயது அமிருல் ஹபீஸ் ஒமார் என்பவரை கொலை செய்ததாக சக்தி கணபதி மற்றொரு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News