Jun 3, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.ஆர்.எம். முன்னாள் தலைவர் அசாம் பாக்கியிடம் போலீஸ் துறை விசாரணை
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.ஆர்.எம். முன்னாள் தலைவர் அசாம் பாக்கியிடம் போலீஸ் துறை விசாரணை

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்.மின் முன்னாள் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கியிடம் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. இந்த விபரத்தை புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ எம். குமார் முத்துவேலு அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

அசாம் பாக்கிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இரண்டு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வெலாசிட்டி கேபிட்டல் நிறுவனத்தின் பங்குகள் தொடர்பாக ப்ளூம்பெர்க் இணையதளத்தில் வெளியான கட்டுரை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது.

தவிர ஒரு வணிகரான ஆல்பர்ட் தே என்பவரை மிரட்டியது மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தது தொடர்பாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

இந்த விசாரணையின் இரண்டு அறிக்கைகள் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை மற்றும் வழிகாட்டுதல்களுக்காக விரைவில் சட்டத்துறை அலுவலகத்திடம் அனுப்பப்படும் என்று டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள் யாரும் வதந்திகளையோ அல்லது யூகங்களையோ பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News