Jun 3, 2026
Thisaigal NewsYouTube
இருக்கைப்பட்டை  இருந்த பெண்: ஓட்டுநர், பயணி மீது நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

இருக்கைப்பட்டை இருந்த பெண்: ஓட்டுநர், பயணி மீது நடவடிக்கை

Share:

ஆடவர் ஒருவர் கார் ஓட்டும்போது, அவருடன் வந்த பெண் பயணி இருக்கைப்பட்டை அணியாமல் அவரை நோக்கி அமர்ந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சாலைப் போக்குவரத்துத் துறையான ஜே.பி.ஜே இதுகுறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளது.

த்ரெட்ஸ் செயலியில் வைரலாகி வரும் அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களில், அந்தப் பெண் காரின் முன்பக்க டேஷ்போர்டில் சாய்ந்து அமர்ந்தவாறு இருப்பது நெட்டிசன்களிடையே பெரும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் காரை ஓட்டிய ஓட்டுநர் மற்றும் பயணி ஆகிய இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜே.பி.ஜே அமலாக்கப் பிரிவு மூத்த இயக்குநர் டத்தோ முகமது கிப்லி மா ஹசான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விசாரணை முழுமையாக நிறைவடைந்தவுடன் அவர்களுக்குச் சமன் அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News