Jun 12, 2026
Thisaigal NewsYouTube
எரிவாயு கசிவு வெடிவிபத்து: இளைஞருக்குப் படுகாயம்!
தற்போதைய செய்திகள்

எரிவாயு கசிவு வெடிவிபத்து: இளைஞருக்குப் படுகாயம்!

Share:

வீட்டின் சமையலறையில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட திடீர்வெடிவிபத்தில் அங்கு வாடகைக்குக் குடியிருந்த 29 வயது இளைஞர் ஒருவர் உடலின் சுமார் 50 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

பகாங்கில் உள்ள தனது சொந்த ஊரிலிருந்து மலாக்கா, அலோர் காஜா பகுதியில் உள்ள தமன் பைதூரி, கோலா ஈனா வீட்டிற்குத் திரும்பிய அந்த இளைஞர், வீட்டில் எரிவாயு கசியும் சத்தம் கேட்பதை உணர்ந்து சமையல் எரிவாயு கலன்னை பரிசோதித்துக் கொண்டிருந்தபோது இந்த பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் அவசர மருத்துவ மீட்பு சேவைக் குழுவினர் (EMRS) பாதிக்கப்பட்ட இளைஞருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்பின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வெடிவிபத்தின் காரணமாக அந்த வீட்டின் கூரை, கதவுகள், ஜன்னல்கள், மேற்கூரை மற்றும் மின்சார வயரிங் உள்ளிட்ட பல கட்டிடத்தின் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. முதற்கட்ட விசாரணையில், வீட்டிற்குள் தேங்கியிருந்த எல்.பி.ஜி. எரிவாயு கசிவு காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருக்களாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், விபத்திற்கான உண்மையான காரணம் குறித்து தீயணைப்புத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அங்கு மீண்டும் எரிவாயு கசிவு ஏற்படும் அபாயம் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்வதற்கான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Related News