Jun 6, 2026
Thisaigal NewsYouTube
அசாம் பாகி வழக்கு: வர்த்தகர்  ஆல்பர்ட் தேய் மீது அவதூறு வழக்கு தொடர நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

அசாம் பாகி வழக்கு: வர்த்தகர் ஆல்பர்ட் தேய் மீது அவதூறு வழக்கு தொடர நடவடிக்கை

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி,/ தன் மீது மிரட்டல் குற்றச்சாட்டுகளை சுமத்திய வர்த்தகர் ர ஆல்பர்ட் தேய் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவுள்ளார்.

இது தொடர்பான வழக்கு நோட்டீஸை ஆல்பர்ட் தேய்க்கு விரைவாக வழங்குமாறு தனது வழக்கறிஞர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, கோலாலம்பூர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் அசாம் பாக்கி இன்று தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு சபாவில் சில முக்கிய அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட ஊழல் ஊழலை அம்பலப்படுத்த முயன்றபோது, அசாம் பாக்கி தன்னை மிரட்டியதாகவும், தடுத்ததாகவும் ஆல்பர்ட் தேய் குற்றம் சாட்டியிருந்தார்.

இக்குற்றச்சாட்டின் பேரில், குற்றவியல் மிரட்டல் சட்டப்பிரிவின் கீழ் போலீஸ் துறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது. தன் மீதான குற்றச்சாட்டை அவதூறு என மறுத்துள்ள அசாம் பாக்கி, இந்த போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்