பேரா, தாப்பா, குனோங் பத்து பூத்தே மலையேற்றப் பகுதியில் கடந்த 11 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 49 வயது ஜஸ்லிந்தா சாலுடின் என்ற பெண் மலையேற்ற வீராங்கனையைத் தேடும் தீவிரப் பணி தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடப்பட்ட தேடுதல் பகுதியில் சுமார் 95 சதவீத இடங்கள் பல்வேறு உத்திகள் மூலம் முழுமையாகச் சோதிக்கப்பட்டுவிட்டதால், இந்தத் கூட்டுத் தேடுதல் பணியின் அளவைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டண்ட் அப்துல் மாலிக் ஹசிம் தெரிவித்துள்ளார்.
இனிவரும் நாட்களில் இந்தத் தேடுதல் நடவடிக்கை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, வனத்துறை, உள்ளூர் பொதுமக்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் மட்டுமே சிறிய அளவில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், கண்காணிப்பு மற்றும் விசாரணைகளைக் போலீஸ் துறை கைவிடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








