கோலாலம்பூர், ஆகஸ்ட்.20-
பொது அமைதிக்குக் குந்தகத்தை ஏற்படுத்தியதாக சிலாங்கூர் கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஹில்மான் இடாம் கோலாலாம்பூர், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவரான முகமட் ஹில்மான், மாஜிஸ்திரேட் அமீரா அப்துல் அஸிஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்படட்து.
36 வயதான வயதான முகமட் ஹில்மான், பொது அமைதிக்கு மிரட்டலை ஏற்படுத்தக்கூடியக் குற்றங்களைப் புரியும்படி தூண்டும் விதமாக அல்ஃபா.சென்னல்.டிவி என்ற டிக் டோக் கணக்கில் உள்ளடக்கத்தைப் பதிவேற்றம் செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து முகமட் ஹில்மான் விசாரணைக் கோரியுள்ளார்.








