Oct 16, 2026
Thisaigal NewsYouTube

சம்பந்தப்பட்ட ஆசாமிக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சம்பந்தப்பட்ட ஆசாமிக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு

கோலாலம்பூர், நவ. 21-


தனது தாயாரை கொன்று மூன்று ஆண்டுகளாக ஐஸ் பெட்டியில் வைத்திருந்ததாக கூறப்படும் 53 வயதுடைய நபரின் தடுப்புக்காவலை மேலும் ஒரு வார காலத்திற்கு போலீசார் நீட்டித்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா குறிப்பிட்டார்.

அந்த நபர் பிடிபட்ட நவம்பர் 12 ஆம் தேதி முதல், பல்வேறு நோய்கள் உபாதை காரணமாக அவர், பெட்டாலிங் ஜெயா, பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அந்த மருத்துவமனையிலிருந்து அவர் நேற்று வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரை மேலும் ஏழு நாட்களுக்கு, வரும் நவம்பர் 26 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையைப்பெற்றுள்ளதாக டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.

கடந்த நவம்பர் 12 ஆம் தேதி பழைய கிள்ளான் சாலை, ஓயுஜி கார்டனில் உள்ள இரண்டு மாடிகளைக்கொண்ட தரை வீடொன்றின் ஐஸ் பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட 80 வயதுடைய அந்த மூதாட்டின் மரணம் தொடர்பில் அந்த மூதாட்டியின் மகனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக டத்தோ ருஸ்டி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →