Sep 27, 2026
Thisaigal NewsYouTube
ஒரே நாடு, ஒரே தேர்தல்": பிரதமர் அன்வாரின் கருத்துக்கு சனுசி அதிரடி ஆதரவு
தற்போதைய செய்திகள்

ஒரே நாடு, ஒரே தேர்தல்": பிரதமர் அன்வாரின் கருத்துக்கு சனுசி அதிரடி ஆதரவு

Share:

நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்துவது செலவுகளைக் குறைக்க உதவும் என கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமது சனுசி முகமது நோர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இந்த யோசனையைத் தாம் மனதார ஆதரிப்பதாகக் கூறிய அவர், தேர்தல்களைத் தனித்தனியாக நடத்துவது அரசாங்கத்திற்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றார்.

இன்று அலோர் ஸ்டாரில் நடைபெற்ற பாஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சனூசி , கெடா சட்டமன்றத்தின் 36 மாத கால அவகாசம் வரும் ஆகஸ்ட் 2026-ல் நிறைவடைவதைச் சுட்டிக்காட்டினார்.

எனவே, அதற்கு முன்னதாக சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related News