Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இஸ்மாயில் சப்ரியின் மூன்று உதவியாளர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்

Share:

கோலாலம்பூர், பிப்.25-

அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் கள்ளப்பணம் பரிமாற்றக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் மூன்று மூத்த உதவியாளர்கள் எஸ்பிஆர்எம் ஜாமீனில் இன்று விடுவிக்கப்பட்டனர் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

அந்த மூவருக்கு எதிராகப் பெறப்பட்டுள்ள தடுப்புக் காவல் ஆணை முடிவுற்றதைத் தொடர்ந்து அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அஸாம் பாக்கி விளக்கினார். இஸ்மாயில் சப்ரியின் உதவியாளர்களில் மொத்தம் நால்வர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்ட வேளையில் எஞ்சிய மூவர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் நான்கு உதவியாளர்களில் ஒருவரின் வீட்டில் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் 10 கோடி ரிங்கிட் ரொக்கம் தொடர்பில் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றது.

Related News

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்