May 22, 2026
Thisaigal NewsYouTube
டிக்கெட் கட்டணம் மே மாதம் நிர்ணயிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

டிக்கெட் கட்டணம் மே மாதம் நிர்ணயிக்கப்படும்

Share:

ஜோர்ஜ் டவுன், மார்ச் 2 -

பினாங்கு மாநில சுற்றுலாத்துறையின் முக்கிய நில அடையாளமாக விளங்கும் புக்கிட் பென்டெரா எனும் கொடி மலையில் புனிகுலர் மலை ரயிலின் டிக்கெட் கட்டணத்தின் புதிய விகிதம் வரும் மே மாதம் முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வருவதாக அந்த சுற்றுலா வாசஸ்தலத்தை நிர்வகித்து வரும் பினாங்கு புக்கிட் பெண்டேரா கழகம் அறிவித்துள்ளது.

ஆகக்கடைசியாக டிக்கெட் கட்டணம் மறுபரிசீலனை செய்யப்பட்டது, கடந்த 2019 ஆம் ஆண்டாகும்.

கடந்த ஐந்து ஆ ண்டாக டிக்கெட் கட்டண விகித்தில் எந்தவொரு மாற்றமும் இல்லாத நிலையில் புதிய கட்டணம் மே மாதம் அறிவிக்கப்படும் என்று பெர்பன்டாரான் புக்கிட் பென்டேரா பூலௌ பினாங் தெரிவித்துள்ளது.

நிர்ணயிக்கப்படவிருக்கும் புதிய கட்டணம் அனைத்து தரப்பினருக்கம் ஏற்புடையதாக இருக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

Related News