பாரிட், நவம்பர்.21-
கடந்த வாரம் 13 வயது மாணவனிடம் பொதுவில் அவமதிப்பு செய்யும் வகையில் ஆபாசமாக நடந்து கொண்டதாக மூன்று மாணவர்கள் இன்று பேரா, பாரிட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
மாஜிஸ்திரேட் நூருல் இஸாலினா ரஜால் முன்னிலையில் நிறுத்தப்பட்ட 16 வயதுடைய அந்த மூன்று மாணவர்களும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.
கடந்த நவம்பர் 14 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் பேரா தெங்காவில் உள்ள பாரிட் இடைநிலைப்பள்ளியில் அந்த மூவரும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








