Dec 4, 2025
Thisaigal NewsYouTube
டத்தோ அந்தஸ்தைக் கொண்ட நபர், பிஎல்கேஎஸ் தற்காலிக வேலை பெர்மிட், குற்றச்சாட்டை மறுத்தது குடிநுழைவுத்துறை
தற்போதைய செய்திகள்

டத்தோ அந்தஸ்தைக் கொண்ட நபர், பிஎல்கேஎஸ் தற்காலிக வேலை பெர்மிட், குற்றச்சாட்டை மறுத்தது குடிநுழைவுத்துறை

Share:

புத்ராஜெயா, ஆகஸ்ட்.09-

தன்னை டத்தோ என்று கூறிக் கொண்ட ஒரு நபர், தடுப்பு முகாமில் உள்ள ஒருவரை விடுவிப்பதற்கு பிஎல்கேஎஸ் எனப்படும் தற்காலிக வேலை பெர்மிட்டைப் பெற்றுக் கொடுப்பதாக உறுதி அளித்து இருந்ததாகப் பகிரப்படும் காணொளியின் உள்ளடக்கக் குற்றச்சாட்டை மலேசிய குடிநுழைவுத்துறை வன்மையாக மறுத்தது.

தடுப்பு முகாமில் உள்ள தங்களுக்கு வேண்டியவரை விடுவிப்பதற்கு அந்த டத்தோவிடம் 5 ஆயிரம் ரிங்கிட்டைக் குடிநுழைவுத்துறையின் கியூஆர் QR குறியீட்டின் மூலம் வழங்கியதாகவும், சம்பந்தப்பட்ட நபர் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும், அவரை விடுவிக்க நீதிமன்றமும் எந்தவோர் உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று ஒரு தம்பதியர் காணொளி வெளியிட்டு இருந்தனர்.

அந்தத் தம்பதியர் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி தங்கள் சமூக ஊடகக் கணக்கில் அந்த காணொளியைப் பதிவேற்றம் செய்து இருந்ததாகக் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்து இருந்தார்.

எனினும் அந்த டத்தோவிடம் அலுவல் மேற்கொள்வதற்கு அந்த தம்பதியர் காணொளியில் காட்டிய குடிநுழைவுத்துறையின் ePass ( இ பாஸ்) மற்றும் கியூஆர் QR குறியீடு போலியானது என்று ஸாகாரியா ஷாபான் விளக்கினார்.

குடிநுழைவுத்துறை தொடர்பான எந்த அலுவலாக இருந்தாலும் அதன் அ திகாரத்துவ அகப்பக்கத்தில் அல்லது அதன் முகப்பிடங்களில் மட்டுமே மேற்கொள்றுமாறு பொது மக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

Related News