கோலாலம்பூர், நவம்பர்.21-
பினாங்கைக் குத்தகைக்கு விட்டதில் ஆண்டுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டிற்கும் கூடுதலான குத்தகைப் பணத்தைக் கோருவதற்கு கெடா அரசுக்கு உரிமை இருக்கிறது என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் உரிமப் பணமாக 100 மில்லியன் ரிங்கிட்டிற்கும் கூடுதலாக பினாங்கு அரசிடமிருந்து கெடா அரசு கோருவதற்கு அடிப்படை முகாந்திரங்கள் உள்ளன என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.
கெடா மாநில அரசின் கோரிக்கை உண்மையிலேயே நியாயமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். காரணம், பினாங்கு மாநிலத்தின் அதிகாரத்தை பிரிட்டிஷாரிடமிருந்து மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டதாக் கெடா மாநிலம் கோருகின்ற ஆண்டுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டைக் குத்தகைப் பணமாக வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.
அந்த தொகைகூட பினாங்கு நில மதிப்பில் நடப்புச் சந்தை விலையாக இருக்க வேண்டும் என்று கெடா மாநிலத்தைச் சேர்ந்தவரான துன் மகாதீர் பரிந்துரை செய்துள்ளார்.








