பேரா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்துள்ளது. இன்று காலை 8.00 மணி நிலவரப்படி, 4 மாவட்டங்களில் இயங்கி வரும் 7 துயர் துடைப்பு மையங்களில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 269 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர்.
பேரா மாநில பேரிடர் நிர்வாக மையம் இவ்விவகாரம் குறித்து தகவல் வெளியிடுகயில், புதிய துயர் துடைப்பு மையங்கள் கிந்தா மாவட்டத்தில் இரண்டும் உலு பேரா மாவடத்தில் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கீழ்ப்பேரா மாவட்டம் விளங்குகிறது. அங்கு ஏற்கெனவே 3 துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டு அவற்றில் 112 குடும்பங்களைச் சேர்ந்த 353 பேர் தங்கி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.








