கோலாலம்பூர், டிசம்பர்.11-
16 ஆண்டுகளுக்கு முன்பு, எஸ்பிஆர்எம் தடுப்புக் காவலில் இருந்த போது, ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணம் அடைந்த தியோ பெங் ஹோக் விவகாரத்தை ஐ.நா.விற்குக் கொண்டுச் செல்வதற்கு அவரின் தங்கை முடிவு செய்துள்ளார்.
தனது அண்ணணின் மரணத்திற்குக் காரணமானவர்கள் யார் என்பதை கண்டறியவதற்கு அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டிய அவர், தங்கள் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதற்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் உள்ள ஐ.நா.வின் மனித உரிமைப் பிரிவிற்குக் கொண்டுச் செல்லப் போவதாக தியோ லீ லான் தெரிவித்தார்.
தனது அண்ணனின் மரணம் தொடர்பில் கடந்த ஜுலை மாதம் ஐ.நா.வில் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தம்முடைய பயணச் செலவுக்கு இதுவரை 50ஆயிரம் ரிங்கிட்டும், TBH அமைப்பு மூலம் நாடு முழுவதும் மேற்கொண்ட பயணத்தின் மூலம் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 377 ரிங்கிட்டும் திரட்டப்பட்டு விட்டதாக தியோ லீ லான் தெரிவித்தார்.








