Oct 16, 2026
Thisaigal NewsYouTube

அந்நிய ஆடவர் மரணம், போலீஸ் விசாரணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்நிய ஆடவர் மரணம், போலீஸ் விசாரணை

ஷா ஆலாம், நவ. 25-


கடந்த சனிக்கிழமை,சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் முதலாவது முனையத்தில் அவேசமாக நடந்துகொண்டதுடன் பெரும் ரகளையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட ஆடவர், இறந்தது தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமான் கான் தெரிவித்தார்.

போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டு, காவலில் வைக்கப்பட்டு இருந்த 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் பிற்பகல் 1.30 மணியளவில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்திலிருந்து தாய்லாந்து, புக்கேட் தீவுக்கு செல்லும் வழியில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் டிரான்ஸிட் பயணியாக வந்திறங்கிய அந்த அந்நிய ஆடவர் விமான நிலையத்தில் ஆவண சோதனையின் போது பெரும் ரகளைப் புரிந்ததாக கூறப்படுகிறது.

போலீஸ் நிலையத்தில் இரண்டு போலீஸ்காரர்களை தாக்கியதுடன் அந்த நபரும் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

அந்த அந்நிய ஆடவரின் இறப்பை திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக டத்தோ ஹுசேன் ஒமார் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →