Mar 13, 2026
Thisaigal NewsYouTube
யானை மிதித்து ஆடவர் கொல்லப்பட்டார்
தற்போதைய செய்திகள்

யானை மிதித்து ஆடவர் கொல்லப்பட்டார்

Share:

தோட்டத் தொழிலாளி ஒருவர் யானை மிதித்து கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு, கிளந்தான், குவ மூசாங், சுங்ஙை பாயு, லாடாங் உப்பயாபாடு என்ற இடத்தில் நிகழ்ந்தது.

39 வயது கிரானா சினாகா என்று அடையாளம் கூறப்பட்ட அத் தொழிலாளி, எலிஃபச் மெக்சிமுஸ் வகையைச் சேர்ந்த மதம் பிடித்த யானையால் மிதித்து கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக இரவு 10 மணியளவில் தாங்கள் ஓர் அவசர அழைப்பை தாங்கள் பெற்றதாக பெர்ஹிலித்தான் எனப்படும் வனவிலங்கு தேசியப் பூங்காவின் இயக்குநர் முஹமாட் ஹஃபிட் ரொஹானி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தாங்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வில் லெபிர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இவ்வகையை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News