Sep 30, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் நிர்வாண நிலையில் சிறுமியைக் கடத்த முயன்ற ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் நிர்வாண நிலையில் சிறுமியைக் கடத்த முயன்ற ஆடவர் கைது

Share:

மலாக்கா, தாமான் ஆயர் மோலெக்கில் இரண்டு வயது சிறுமியை கடத்த முயன்றதாகக் கூறப்படும் 36 வயது ஆடவர், நிர்வாண நிலையில் இருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ஹலிம் அபாஸ் கூறுகையில், நேற்று இரவு 8 மணியளவில் குடியிருப்பு ஒன்றின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் அந்த ஆடவர் நுழைந்ததாகத் தெரிவித்தார்.

காரில் இருந்த தனது மகனை தந்தை வெளியே மீட்ட நிலையில், அந்த ஆடவர் வெளியேற மறுத்து ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும், பின்னர் வீட்டின் உரிமையாளரின் மனைவியிடமிருந்து கைபேசியைப் பறிக்க முயன்றதுடன், அவர்களின் இரண்டு வயது மகளைப் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

சிறுமியை மீட்க தந்தை போராடிய நிலையில், பொதுமக்கள் தலையிட்டு அந்த ஆடவரைக் கட்டுப்படுத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சம்பவத்தின்போது தலையில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். ஆரம்ப சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான அறிகுறி கண்டறியப்பட்டதுடன், சிறார் பாலியல் குற்றம் தொடர்பான முந்தைய குற்றப்பதிவும் இருப்பது தெரிய வந்துள்ளது.

Related News