Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேகம்
தற்போதைய செய்திகள்

ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேகம்

Share:

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலின் தங்க விமான, வெள்ளி, பந்தன, அஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மகா கும்பாபிஷேகம் இன்று ஜுன் 25 ஆம் தேதி காலை 11.10 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் வெகுசிறப்பாக நடைபெற்றது.
தேவஸ்தானத்தின் முதன்மை குருக்களுடன் இணைந்து, ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலின் ஏழாவது திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மகா கும்பாபிஷேகம் சிவக்குமார் பட்டர் முன்னிலையில் இதர விஷேச வழிபாடுகளுடன் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா, அவர்தம் துணைவியார் புவான்ஸ்ரீ மல்லிகா, அறங்காவல் டத்தோ என். சிவகுமார் மற்றும் தேவஸ்தானப் பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மகா கும்பாபிஷேக பெருவிழாவில், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா வின் தேசிய துணைத் தலைவருமான டத்தோ எம். சரவணன், மஇகாவின் முன்னாள் தலைவர் டத்தோ ஶ்ரீ சாமிவேலுவின் புதல்வர் எஸ். வேள்பாரி, மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதி ராவ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
கடந்த 1873 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, நாட்டின் தாய்கோயிலான கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் 7 ஆவது மகா கும்பாபிஷேகத்தையொட்டி இன்றிரவு கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் அன்னை ஸ்ரீ மகாமாரியம்மன், தங்க ரதத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி அளிப்பார் என்று டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்துள்ளார்.

Related News