Jul 2, 2026
Thisaigal NewsYouTube
 இந்தியப் பெண்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மூலம் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும்: டத்தோ அ.சிவநேசன் அழைப்பு
தற்போதைய செய்திகள்

இந்தியப் பெண்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மூலம் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும்: டத்தோ அ.சிவநேசன் அழைப்பு

Share:

இந்தியப் பெண்கள் பொருளாதாரத் தன்னிறைவு அடைய அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், சுங்காய் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ அ.சிவநேசன் வலியுறுத்தியுள்ளார்.

புந்தோங் பகுதியில் இந்தியப் பெண்களுக்காகப் பேராக் மாநில அரசின் 'பாசாக்' நிறுவனம் சார்பில் முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்ட 5 நாள் அழகுக்கலை மற்றும் அலங்காரப் பயிற்சித் திட்டத்தின் நற்சான்றிதழ் வழங்கும் விழாவில் டத்தோ சிவநேசன் கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ சிவநேசன், மெனிக்யூர், பெடிக்யூர் மற்றும் மணப்பெண் அலங்காரம் போன்ற சேவைகளுக்காகப் பிற சமூகத்தாரை நாடாமல், இந்தியப் பெண்களும் இத்துறையில் தொழில்முறையாக முன்னேற வேண்டும் என்றார்.

இத்துறைக்கு அதிக முதலீடு தேவையில்லை என்பதால், குழுவாகச் செயல்பட்டு பெண்கள் ஆயிரக்கணக்கில் வருமானம் ஈட்ட முடியும் என்றும், பயிற்சி முடித்தவர்கள் சிறு தொழில்களைத் தொடங்க அடுத்த கட்டமாக உதவிகள் வழங்கப்படும் என்றும் டத்தோ சிவநேசன் உறுதியளித்தார்.

இந்த ‘பாஷாக்’ திட்டத்தின் பயிற்றுநரான சரஸ்வதி ஆறுமுகம் கூறுகையில் தாய்மார்கள் உட்பட 20 பேர் பங்கேற்ற இந்தப் பயற்சியில் அ னைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, பயன்பெற்றதாக குறிப்பிட்டார்.

இந்தப் பயிற்சித் திட்டம் எத்தகைய ஆக்கப்பூர்வமாக அமைந்துள்ளது என்பதை இதில் பங்கேற்றவர்களில் தர்ஷினி முத்துசாமியும், புவனா நடராஜனும் இவ்வாறு விவரித்தனர்.

பயிற்சி முடித்தவர்கள் சிறு தொழில்களைத் தொடங்க அடுத்த கட்டமாக உதவிகள் வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related News

ஈப்போவில் 2-வது தேசிய திருமுருகன் மாநாடு: டத்தோ அ. சிவநேசன் அழைப்பு

ஈப்போவில் 2-வது தேசிய திருமுருகன் மாநாடு: டத்தோ அ. சிவநேசன் அழைப்பு

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்