Sep 24, 2026
Thisaigal NewsYouTube
செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

Share:

செராஸ் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் கடந்த ஜூன் 29-ஆம் தேதி ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் தொடர்பாக 12 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மர்சுஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 20 முதல் 40 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள் கோலாலம்பூரின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட மூன்று தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், வணிக வளாக ஊழியர் ஒருவர் சாலையை மறித்துக் கொண்டிருந்த ஒரு குழுவினரிடம் எச்சரிக்கை விடுத்ததே தகராறுக்கு காரணமாக இருந்தது தெரியவந்துள்ளது.

அந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதுடன், பின்னர் அது கைகலப்பாக மாறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Related News