ஜார்ஜ்டவுன், அக்டோபர்.24-
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனத்த மழை மற்றும் நிலச்சரிவு சம்பவங்களைத் தொடர்ந்து மக்களின் பாதுகாப்பைக் கருதி, பினாங்கு கொடி மலை மற்றும் ஆயர் ஹீத்தாம் அணைக்கட்டுக்குச் செல்லும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கொடிமலையில் நிகழ்ந்துள்ள சிறிய அளவிலான நிலச்சரிவு சம்பவங்களைத் தொடர்ந்து அப்பகுதியில் சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக அந்த சுற்றுலாத் தலம் தற்காலிகமாக மூடப்படுவதாக கொடிமலையை நிர்வகித்து வரும் Penang Hill Corporation அறிவித்துள்ளது.
எனினும் நிலச்சரிவு சம்பவங்களில் யாரும் காயம் அடையவில்லை என்பதையும் அது விளக்கியது.








