Jul 2, 2026
Thisaigal NewsYouTube
வயது மகனை சித்திரவதை செய்த வளர்ப்புத் தந்தைக்கு 4 நாட்கள் காவல் நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

வயது மகனை சித்திரவதை செய்த வளர்ப்புத் தந்தைக்கு 4 நாட்கள் காவல் நீட்டிப்பு

Share:

டுங்குன், மே.17-

திரங்கானு மாநிலம் டுங்குன் பகுதியில் 5 வயது மகனை சித்திரவதைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 36 வயது வளர்ப்புத் தந்தைக்கு மேலும் 4 நாட்களுக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி குழந்தையின் விரல்களில் தீக்காயம் இருப்பதைக் கண்ட தாயார், கடந்த மே 10-ஆம் தேதி போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், குழந்தை தன்னிடம் குறும்பு செய்ததால் லைட்டர் கொண்டு இடது கையின் மோதிர விரலை எரித்ததாக அந்நபரை விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும், தமது வளர்ப்புத் தந்தை, வயிற்றில் மிதித்ததுடன் கழுத்தை நெரித்ததாகவும் அச்சிறுவன் தனது அக்காவிடம் தெரிவித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, இந்த வழக்கில் இதுவரை 3 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தையிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டுங்குன் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் Jumaidy Bah Chong Weh தெரிவித்துள்ளார்.

Related News

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு