Oct 14, 2026
Thisaigal NewsYouTube

ஆந்திராவில் யானைகள் தாக்கி 5 பக்தர்கள் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:

அமரவாதி, பிப்.25-

ஆந்திராவில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பக்தர்கள் 5 பேர் காட்டு யானைகள் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள தலகோனாவில் உள்ள சிவன் கோவிலுக்கு மகாசிவராத்திரி கொண்டாட்டத்திற்காக பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை சேஷாசலம் வனப்பகுதி வழியாக நடந்து சென்றபோது யானைக் கூட்டம் தாக்கியதில் அந்த 5 பக்தர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

பக்தர்கள் கூச்சலிட்டு யானைகளைப் பயமுறுத்த முயன்றதாக ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். மேலும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினர். யானைகள் ஆக்ரோஷமாகின. அவர்களைச் சுற்றி வளைத்துத் தாக்கின. யானைகள் மிதித்ததில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று அவர் தெரிவித்தார்.

போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியைத் தொடங்கினர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவரின் நிலை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை

‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை