டாக்டர் ராமசாமி வலியுறுத்து
இனத்துவேசத்தை தூண்டிவிட்டு, நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைத்து வரும் பாஸ் கட்சியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த நடப்பு அரசாங்கம் புதிய உத்திகளைக் கையாளவேண்டும் என்றும் பினாங்கு மாநில துணை முதல்வர் டாக்டர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
பல்லின மக்களிடையே நிலவிவரும் ஒற்றுமைக்கு ஆணியடிக்கும் கைங்கரியத்தை புரிந்து வரும் பாஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள அரசாங்கம் ஓரிரு புதிய துறைகளை உருவாக்கியுள்ள வேளையில், அவை தற்போது அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனவே தவிர, எதிர்கட்சிகள் எழுப்பியுள்ள மத அல்லது இனத்துவேசப் பிரச்சனையை எதிர்கொள்ளும் வியூகங்களை அவை கொண்டிருக்க வில்லை என்று டாக்சர் ராமசாமி விவரித்துள்ளார்.
சரியான வியூகத்தை கையாண்டால், பாஸ் கட்சியிடம் உள்ள மலாய்க்காரர்களின் ஆதரவை நடப்பு அரசாங்கம் நிச்சயம் பெற முடியும் என்று டாக்டர் ராமசாமி குறிப்பிட்டார்.








