Nov 19, 2026
Thisaigal NewsYouTube

ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருள் கையிருப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருள் கையிருப்பு

நாட்டில் குறைந்தது ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருள் விநியோகத் திறனும் கையிருப்பும் இருப்பதால், பொதுமக்கள் உணவுப் பொருட்களை அவசரகாலத் தேவைக்காகச் சேமித்து வைக்க வேண்டிய அவசியமில்லை எனத் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் அத்தியாவசியப் பொருட்களின் போதுமான விநியோகத்தையும் அரசாங்கம் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

சில நாடுகள் தங்களது குடிமக்களை உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறு அறிவுறுத்தியுள்ள நிலையில், மலேசியாவில் அத்தகைய அவசரநிலை எதுவும் தற்போது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற மலேசியா–சீனா ஒத்துழைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் ஸாஹிட் இதனைத் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருள் கையிருப்பு | Thisaigal News