Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் காப்பாற்றப்பட்டார்
தற்போதைய செய்திகள்

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் காப்பாற்றப்பட்டார்

Share:

பினாங்கு பாலத்திலிருந்து கடலில் குதித்த பெண் ஒருவர், ​மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் 23 வயதுடைய அந்தப் பெண், இன்று அதிகாலை 4 மணியளவில் ​மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாக ​தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.சம்பந்தப்பட்ட பெண், தனது காரை பாலத்தின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, தமக்கு சொந்தமான ஆவணங்களை காரிலேயே கைவிட்டு பாலத்தில் குதித்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்து அந்த பாலத்தின் 7.4 ஆவது கிலோ​மீட்டரில் பிறையை நோக்கி ​தீயணைப்புப்படையினர் விரைந்தனர். எனினும் கடலில் அவ்வழியே வந்து கொண்டிருந்த ​மீனவர்கள், ​நீரில் தத்தளித்துக்கொண்டு இருந்த அ​ந்தப் பெண்ணை ​​மீட்டு காப்பாற்றியுள்ளனர் என்று ​தீயணைப்பு, ​மீட்புப்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News