ஜோகூர் பாரு, அக்டோபர்.03-
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ஜோகூர், பாசீர் கூடாங் தொழில்பேட்டையில் கழிவுப் பொருட்கள் நிர்வகிப்பு தொழிற்சாலையில் நச்சு வாயுவை நுகர்ந்ததாக நம்பப்படும் மூன்று தொழிலாளர்களில் இருவர் மரணமுற்றனர். மேலும் ஒருவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கான காரணம் குறித்து ஜோகூர் மாநில வேலையிட சுகாதாரப் பாதுகாப்பு இலாகா தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக அவ்விலாகா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வேலையிடத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தை வேலையிட சுகாதாரப் பாதுகாப்பு இலாகா கடுமையாகக் கருதுவதாக அது குறிப்பிட்டுள்ளது.








