கோலாலம்பூர், ஜனவரி.18-
கூச்சாய் லாமா வணிக வளாகத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக போலித் தங்கக் காசுகளை விற்று வந்த ஒரு நிறுவனம், உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் சோதனையில் சிக்கியது. 999.9 தரம் என முத்திரையிடப்பட்ட அந்தத் தங்கக் காசுகளை XRF எக்ஸ்-ரே கருவி மூலம் ஆய்வு செய்த போது, அதில் வெறும் 77 விழுக்காடு முதல் 98 விழுக்காடு வரை மட்டுமே தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
அப்பாவி மக்களை ஏமாற்றி வந்த அந்தப் புகலிடத்திலிருந்து சுமார் 82 ஆயிரத்து 725 ரிங்கிட் மதிப்புள்ள 3,545 தங்கக் காசுகளையும் முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வர்த்தக விவரணைச் சட்டம் 2011-ன் கீழ் அந்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, போலித் தரம் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.








