Aug 12, 2026
Thisaigal NewsYouTube
14 வயது இளம் பெண் காணவில்லை
தற்போதைய செய்திகள்

14 வயது இளம் பெண் காணவில்லை

Share:

பெட்டாலிங் ஜெயா, மே.28-

பெட்டாலிங் ஜெயாவில் கடந்த மே 15 ஆம் தேதி முதல் 14 வயது பெண் காணாமல் போனது தொடர்பில் அவரைத் தேடுவதில் போலீசார், பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

ஏஞ்சல் என்று அடையாளம் கூறப்பட்டுள்ள அந்த இளம் பெண், காணாமல் போனது குறித்து அவரின் குடும்பத்தினர் கடந்த மே 19 ஆம் தேதி போலீசில் புகார் செய்துள்ளனர்.

அந்த இளம் பெண் ஆகக் கடைசியாக கடந்த மே 15 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, ஜாலான் 21 /33 சீபார்க்கில் காணப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணைப் பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள், அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருல்நிஸாம் ஜாபார் தெரிவித்துள்ளார்.

Related News