Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அம்னோவிற்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

அம்னோவிற்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன

Share:

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், நாளை வியாழக்கிழமை பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளவிருக்கும் வேளையில் பத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களில் அம்னோவிற்கு நான்கு இடங்களும் , பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆறு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது முதல் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் ஆட்சி நிறுவப்படுவதில் நிலவி வந்த முட்டுக்கட்டைகள் அகற்றப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில ஆட்சிக்குழுவில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் டிஏபி க்கு 4 இடங்களும், பிகேஆர் க்கு இரண்டு இடங்களும், அமானாவிற்கு சட்டமன்ற சபா நாயர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related News