Jul 16, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றத்திற்கு அமீரா போட்டி: புத்தேரி வாங்சா தொகுதிக்கு மூடா கட்சி சார்பில் ரஷிஃபா போட்டி
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத்திற்கு அமீரா போட்டி: புத்தேரி வாங்சா தொகுதிக்கு மூடா கட்சி சார்பில் ரஷிஃபா போட்டி

Share:

மூடா கட்சியின் தலைவர் அமிரா ஆயிஷா அப்துல் அஜீஸ், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருப்பதால், ஜோகூர் மாநிலத் சட்டமன்ற தேர்தலில் தனது புத்திரி வாங்சா சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட மாட்டார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில் புத்திரி வாங்சா தொகுதிக்கான மூடா கட்சியின் வேட்பாளராக ரஷிஃபா அல்ஜுனைட் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மூடா கட்சி தனது முதல் தேர்தல் வெற்றியைப் பதிவு செய்த தொகுதி என்பதால், புத்திரி வாங்சா, தங்களின் வரலாற்றில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளதாக அக்கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அமீராவின் தலைமை அதிகாரியாகவும், புத்திரி வாங்சா சேவை மையத்தின் முக்கிய உறுப்பினராகவும் இருக்கும் ரஷிஃபா, நீண்ட காலமாக இத்தொகுதியின் மக்கள் நலத்திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த 2022 மாநிலத் தேர்தலில் அமிரா ஆயிஷா 7,114 வாக்குகள் பெரும்பான்மையில் இத்தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஈப்போவில் இணைய மோசடிக் கும்பல் சிக்கியது: 18 சீனப் பிரஜைகள் கைது

ஈப்போவில் இணைய மோசடிக் கும்பல் சிக்கியது: 18 சீனப் பிரஜைகள் கைது

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்