கோலாலம்பூர், ஜூலை.29-
ஒழுக்கக்கேட்டிற்கு வழி வகுக்கும் இரண்டு புத்தகங்ளுக்கு உள்துறை அமைச்சு தடை விதித்துள்ளது. அவ்விரு நூல்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஜுலை முதல் தேதி மற்றும் ஜுலை 3 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சேஸ் மீ மற்றும் தெ ஒப்செஸ்ஸிவ் ஹஸ்பண்ட் ஆகியவையே அந்த இரு புத்தகங்களாகும். ஒழுக்கத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய அந்த இரண்டு புத்தகங்களும் 1984 ஆம் ஆண்டு அச்சு இயந்திர மற்றும் அச்சகச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.








