சுங்கை பட்டாணி, பிப்ரவரி.24-
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் நிலையில் குவாந்தான் ஓராங் மூடா என்ற புதிய திட்டத்தை Impak என்ற அமைப்பின் கீழ் தோற்றுவிக்கத் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும் கெடா மாநில மக்கள் நீதி கட்சியின் துணைத் தலைவருமான டாக்டர் தௌஃபிக் ஜோஹாரி தெரிவித்தார் .

குவாசா ஓராங் மூடா திட்டம் இதற்கு முன்பு பள்ளி மற்று பல்கலைகழக மாணவர்களை நோக்கி செயல்பட்டதாக அவர் தெரிவித்தார். ஆனால் இவ்வாண்டிலிருந்து அதே திட்டத்தை கிராமப்புறங்களிலுள்ள இளைஞர்களை மையமாகக் கொண்டுச் செயல்படுவதற்கான முயற்சியில் இருப்பத்தாக தௌஃபிக் ஜோஹாரி கூறினார்.
நேற்று சுங்கை பட்டாணி ZAQUES தங்கும் விடுதியில் நடைபெற்ற கெடா மாநில மக்கள் நீதி கட்சியின் தலைமைத்துவ குழு (Majlis Pempinan Negeri ( MPN ) Kedah ) மற்றும் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோனுடன் இணைந்து இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் தௌஃபிக் ஜோஹாரியும் கலந்து கொண்டார். அக்கலந்துரையாடல் நிகழ்வில் இளைஞர்களின் பற்றிய கேள்விகளுக்கு மேற்கண்டவாறு தௌஃபிக் ஜோஹாரி பதிலளித்தார்.

மேலும், தௌஃபிக் ஜோஹாரி கூறுகையில் குவாசா ஓராங் மூடா திட்டம் என்றால் என்ன? இத்திட்டம் மூலம் இளைஞர்களுக்கு நாட்டின் ஆட்சி அமைப்பு, தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முக்கியத்துவம் இன்னும் சில முக்கியக் கூறுகள் திட்டத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார். 18 வயது வாக்களிப்பு அமலாக்கத்தின் சமயத்தில் இளைஞர்களின் பெரிய அலைக்கு அரசியல் கட்சிகள் முழுமையாக தயாராக இருக்கவில்லை என்றார். 16, 17 மற்றும் 18 வயது என்பது இளைஞர்களின் முக்கியப் பருவ காலம். ஆனால் அந்த பருவத்தில் அவர்கள் வாக்களிப்பின் முக்கியத்துவம் பற்றிய தகவல்கள் அறிந்திருக்க முடியாது என்றார். ஏனென்றால் வாக்களிப்போ அல்லது அரசியல் பற்றிய தகவல்கள் பாடத் திட்டத்தில் இல்லை என்று கூறினார்.
ஒவ்வொரு மாணவர்களும் இளைஞர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஜனநாயக அமைப்பு போன்றவற்றைத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என்றார் தௌஃபிக் ஜோஹாரி. அதனால் இப்பொழுது அமைச்சின் முயற்சியில் குவாசா ஓராங் மூடா திட்டத்தை வலுப்படுத்தி குறிப்பாக கிராப்புற இளைஞர்கள் ஜனநாயக செயல்முறைகளை எளிதாக புரிந்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தௌஃபிக் ஜோஹாரி தெரிவித்தார்.

ஆகவே, ஒரு கட்சியை அடிப்படையாகக் கொண்டு தலைவர்களைத் தேர்வுச் செய்யக்கூடாது, தலைவரின் திறன் மற்றும் அவரின் தலைமைத்துவத்தைப் புரிந்து கொண்டு தேர்வுச் செய்ய வேண்டும். இளைஞர்களை வலுப்படுத்துவது அமைச்சின் முக்கிய இலக்காகும். இனி கிராமப்புற இளைஞர்கள் மீது எங்களின் கவனம் இருப்பதோடு அவர்களை எளிய முறையில் அணுகுவோம் என்று குறிப்பிட்டார் அமைச்சர் தௌஃபிக் ஜோஹாரி.








