Oct 23, 2026
Thisaigal NewsYouTube

‘கெங் யுனா’ கும்பல்: 9 பேர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
‘கெங் யுனா’ கும்பல்: 9 பேர் மீது குற்றச்சாட்டு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று பெண்கள் உட்பட ஒன்பது பேர், குற்றக் கும்பலில் உறுப்பினர்களாக இருந்ததாகப் பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

18 முதல் 43 வயதுக்குட்பட்ட அந்த ஒன்பது பேரும், கடந்த ஆண்டு ஜனவரி முதல் இவ்வாண்டு செப்டம்பர் வரை, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள செண்டர்ஸ்டேஜ் பகுதியில் ‘கெங் யுனா’ எனப்படும் குற்றக் கும்பலில் உறுப்பினர்களாக இருந்ததாகத் தனித்தனியாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு ஆண்கள் முஹமட் அமிருல், முஹமட் அமிருல் நாயிம், முஹமட் அஸ்பி ஷைஃபுல்லா, முஹமட் ஜோஷுவா சல்மான், லாய் கோக் ஹோ, தாம் யோங் ஸீ மற்றும் சியா ஜூன் கியாட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்று பெண்கள் நுராஸ்லிண்டா நாதாஷா ஹனாஃபி, நூர் சுஹாடா பெஞ்சமின் அப்துல்லா மற்றும் அய்மான் மூனா முஹமட் ரஸாலி ஆவர். 

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →