Oct 23, 2026
Thisaigal NewsYouTube

ரஃபிஸி மீது ஊழல் குற்றச்சாட்டு: ரமணனை எதிர்த்து வழக்குத் தொடர முடிவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரஃபிஸி மீது ஊழல் குற்றச்சாட்டு: ரமணனை எதிர்த்து வழக்குத் தொடர முடிவு

மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன், தம்மீது சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரி ரஃபிஸி ரம்லி சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறார்.

நேற்று அக்டோபர் 22ஆம் தேதி ரமணன் நடத்திய செய்தியாளர் சந்திப்பை ஆய்வு செய்த பின்னர், அவதூறு வழக்குத் தொடரத் தமது வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ரஃபிஸி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஊழலில் தமக்குத் தொடர்பிருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட விவகாரங்களில் வழக்குத் தொடர வலுவான அடிப்படை இருப்பதாகத் தமது வழக்கறிஞர்கள் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட கருத்தை நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் சிறப்புரிமைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசிக்க வேண்டும் என்றும் ரஃபிஸி வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →