Oct 23, 2026
Thisaigal NewsYouTube

காஜாங் தொழிற்சாலையில் ஹீலியம் எரிவாயுக் கலன் வெடிப்பு: தொழிலாளி பலி!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காஜாங் தொழிற்சாலையில் ஹீலியம் எரிவாயுக் கலன் வெடிப்பு: தொழிலாளி பலி!

காஜாங், சுங்கை சுவா பகுதியில் உள்ள பழைய உலோகங்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் ஹீலியம் எரிவாயுக் கலன் வெடித்ததில், 49 வயது ஆடவர் உயிரிழந்தார்.

இன்று காலை 11.53 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும், நண்பகல் 12 மணிக்கு காஜாங் தீயணைப்பு மீட்புப் படையினர் சம்பவ இடத்தை அடைந்ததாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு துணை இயக்குநர் அஷ்ருல் ரிஸால் அஸ்பார் தெரிவித்தார்.

வெடிப்பில் அந்தத் தொழிலாளியின் இடுப்புக்குக் கீழ்ப்பகுதியில் பலத்த காயங்களும் அதிக ரத்தப்போக்கும் ஏற்பட்டதாக அவர் கூறினார். சம்பவத்தின்போது தொழிற்சாலையில் அவர் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தார். பின்னர், சுகாதார அமைச்சின் மருத்துவப் பணியாளர்கள் அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
காஜாங் தொழிற்சாலையில் ஹீலியம் எரிவாயுக் கலன் வெடிப்பு: தொ... | Thisaigal News