தொழில்துறை தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமிடம் மின்சார வாகனம் தொடர்பான பயிற்சிகள் விரிவுபடுத்த முன்மொழியப்படும் என மலேசிய இந்தியர் சமூகப் பொருளாதார உருமாற்றப் பிரிவான மித்ரா தெரிவித்துள்ள்ளது.
மலேசியாவில் மின்சார வாகனங்களுக்கான வசதிகள் மேம்பாடு கண்டு வந்தாலும் தொழில்நுட்பம், தொழிற்பயிற்சி கல்வியில் இது சார்ந்து குறைவாகவே இருப்பதாக மித்ராவின் தலைவர் வ் குறிப்பிட்டார்.
0 பிரிவில் உள்ள இந்திய இளைஞர்களுக்கு மட்டுமின்றி மலாய்,,சீன இளைஞர்களுக்கும் இந்த பிரிவின் கீழ் மின்சாரம், தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் என அவர் கூறினார்.
இன்று உள்ள பூசாட் கெசெம்ர்லாங்ஙான் ஓட்டோட்ரோனிக்கில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான முழுமையான வசதிகளைக் கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், அவை போதுமானதாக இல்லை, அதை மேலும் விரிவுபடுத்த வேண்டும். மேம்படுத்த வேண்டும். எனவே, மின் வாகனங்கள் தொடர்பான திட்டங்களை முன்னெடுப்பது குறித்து பிரதமருடன் தாம் ஆலோசிக்க இருப்பதாக டத்தோ இரமணன் குறிப்பிட்டார்.
மின் வாகனப் பயிற்சியில் தற்போது 250 மாணவர்கள் உள்ளனர், அவர்களுக்கு UKவில் இருந்து தாஹாப் திகா இன்டுஸ்ட்ரி பெர்மொதொரான் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது அத்துடன் பயிற்சி முடிந்ததும் வேலை வாய்ப்புகள் காத்திருபதாகவும் பயிற்சியை முடித்த ஒவ்வொரு மாணவருக்கும் குறைந்தது மூவாயிரம் வெள்ளி வரை ஊதியம் கிடைக்கும் எனவும் இரமணன் கூறினார்.
இதற்கு மித்ரா 2.875 மில்லியன் வெள்ளியை இதுக்கி இருப்பதாகவும் அவர் சொன்னார்.








