கோலாலம்பூர், நவம்பர்.10-
வெள்ளத்திற்கு வித்திடலாம் என்று எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழை வரும் நவம்பர் 13 ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது.
இந்தப் பருவமழை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வுவுத்துறையான மெட்மலேசியாவின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் தெரிவித்துள்ளார்.
இக்காலக் கட்டத்தில் கனத்த மழை சில தினங்களுக்கு நீடிக்கலாம். இதனால் ஆறுகள் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
வடகிழக்கு காற்றும் பலமாக வீசும், கடலில் கொந்தளிப்பு ஏற்படலாம். தென் சீனாக் கடலில் நீரின் மட்டம் உயரும் என டாக்டர் முகமட் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.








