Oct 9, 2026
Thisaigal NewsYouTube

பாசீர் கூடாங் மருத்துவமனை ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து செயல்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாசீர் கூடாங் மருத்துவமனை ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து செயல்படும்

பாசீர் கூடாங், ஜூன்.29-

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் செயல்பட இருக்கிறது பாசீர் கூடாங் மருத்துவமனை. ஜோகூர் பாருவில் சுமார் 500 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்டுள்ள அம்மருத்துவமனை படிப்படியாகச் செயல்படத் தொடங்கும். சுல்தானா அமினா மருத்துவமனை, சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனை ஆகியவற்றுக்குப் பிறகு ஜோகூர் பாருவில் உள்ள மூன்றாவது பொது மருத்துவமனை இதுவாகும்.

முழுமையாகச் செயல்படும்போது, இது மற்ற இரு மருத்துவமனைகளில் உள்ள நெரிசலைக் குறைக்கும் எனச் சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் நம்பிக்கை தெரிவித்தார். ஜூலை 2026-க்குள் 1,800-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் பாசீர் கூடாங் மருத்துவமனை முழுமையாகச் செயல்படும் என்றும், சுல்தானா அமினா 2 மருத்துவமனை திட்டத்திற்கான தொடக்கக் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →