கோலாலம்பூர், செப்டம்பர்.28-
மலேசிய எல்லைப் பகுதிகளில் நடந்த 'கவுண்டர் செட்டிங்' ஊழல் மோசடி தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் – எஸ்பிஆர்எம், அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தச் சிண்டிகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
அவர்களிடம் இருந்து 9 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம், ஆடம்பர வாகனங்கள், ரொக்கம், வங்கி கணக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த அதிகாரிகள், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் கிடைத்த பணத்தைக் கொண்டு தங்கக் கடைகளையும் தொடங்கியதும், பினாமி கணக்குகளைப் பயன்படுத்தியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 18 அதிகாரிகள் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.








