கின்னஸ் மலேசியா நிறுவனம், மலேசிய சந்தையில் தனது மிகச்சிறிய 'கின்னஸ் டிராஃப்ட் இன் கேன்' தயாரிப்பை அறிமுகப்படுத்துவதை முன்னிட்டு, ‘ஹவுஸ் ஆஃப் ஸ்மால்’ என்ற பிரத்யேக கண்காட்சி அரங்கை அமைக்கவுள்ளது. இந்த புதுமையான பாப்-அப் அரங்கு வரும் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில், கோலாலம்பூரில் உள்ள 'தி எக்ஸ்சேஞ்ச் டிஆர்எக்ஸ்' வணிக வளாகத்தின் அர்பன் நோட் பகுதியில் பொதுமக்கள் பார்வைக்காக அமைக்கப்படவுள்ளது.
பார்வையாளர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 'ஹவுஸ் ஆஃப் ஸ்மால்' அரங்கு, ஒரு சாதாரண வீட்டுச் சூழலை புதுமையான முறையில் பிரதிபலிக்கிறது. பொதுவாக பாரில் அமர்ந்து பருகும் அதே மென்மையான, கிரீமியான கின்னஸ் டிராஃப்ட் சுவையை, இனி பயனீட்டாளர்கள் தங்களின் வீடுகளிலேயே மிக எளிதாக அனுபவிக்க முடியும் என்பதை இத்தயாரிப்பு உணர்த்துகிறது.
இந்தத் தற்காலிக இல்ல வடிவ அரங்கிற்கு வரும் தகுதியுடைய பார்வையாளர்கள், நான்கு பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு, வழிகாட்டி ஒருவரின் உதவியுடன் பல்வேறு சுவாரசியமான செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்படுவர். இந்த பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் ஒவ்வொருவருக்கும் ஒரு இலவச கின்னஸ் கேன், ஒரு பிரத்யேக கின்னஸ் கண்ணாடி மற்றும் 'மெர்காடோ டிஆர்எக்ஸ்' கிளையில் கின்னஸ் தயாரிப்புகளை வாங்கும்போது பயன்படுத்தக்கூடிய 5 ரிங்கிட் மதிப்பிலான தள்ளுபடி வவுச்சர் ஆகியவை கையிருப்பில் உள்ளவரை வழங்கப்படும்.
மேலும், இந்த கேன்களுக்குள் இருக்கும் தனித்துவமான தொழில்நுட்பத்தை விளக்கும் வகையில் 'நைட்ரஜன் விட்ஜெட் சேலஞ்ச்' (Nitrogen Widget Challenge) என்ற சவாலும் நடத்தப்படும். கின்னஸ் பானத்தின் பிரத்யேக நுரை மற்றும் மென்மையான சுவையை உருவாக்குவதில் இந்த நைட்ரஜன் விட்ஜெட் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சவாலில் வெற்றி பெறுபவர்களுக்கும் இலவச கின்னஸ் கேன் மற்றும் தள்ளுபடி வவுச்சர்கள் வழங்கப்படும்.
இந்த இரண்டு நாள் கண்காட்சி காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும். இதற்கு முன்அனுமதி தேவையில்லை, நேரடியாக வந்து பங்கேற்கலாம். எனினும், இந்த நிகழ்வு மற்றும் விளம்பரச் சலுகைகள் அனைத்தும் 21 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டுமே பொருந்தும். கின்னஸ் மலேசியா நிறுவனம் பொறுப்பான மது பயனீட்டை வலியுறுத்துவதோடு, 'மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்ட வேண்டாம்' என்றும் பயனீட்டாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு, கின்னஸ் மலேசியாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் (facebook.com) மற்றும் இன்ஸ்டாகிராம் (@GuinnessMY) பக்கங்களைப் பார்வையிடலாம்.








