Aug 2, 2026
Thisaigal NewsYouTube
சம்பள உயர்வு, அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

சம்பள உயர்வு, அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும்

Share:

அரசாங்க ஊழியர்களுக்கான புதிய சம்பளத்திட்டம் அடுத்த ஆ​ண்டு இறுதிக்குள் அறிவிக்கப்பட்டு விடும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்கு வழிகோலும் இந்த புதிய சம்பளத்திட்டம் தொடர்பான வழிகாட்டல் முறை, இவ்வாண்டு இறுதிக்குள் தயாரிக்கப்பட்டு விடும். அடுத்த ஆண்டு முதலாவது காலாண்டில் அத்திட்டம் முழுமையாக ஆராயப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்ற பிரதமர் குறிப்பிட்டார்.

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்திட்டமான சிஸ்தம் சாரான் பெர்கிட்மத்தான் அவாம் குறித்து இதுவரையில் எந்தவொரு விரிவான ஆய்வும் நடத்தப்படவில்லை. எனினும் தமது தலைமையிலான அரசாங்கம் இச்சம்பளத்திட்ட முறையை முழுமையாக ஆராய்ந்து புதிய சம்பளத்திட்டத்திற்கு ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தவிருப்பதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு